வெறுமைப் பாடல்

மழை பெருத்த
ஓர் அந்தியின் அகாலத்தில்
பெருந்துயரம் துரத்தும்
பயணத்தின் ஒரு கணத்திலே
அது
நிகழ்ந்தாயிற்று

இத்தனை நாட்களை
தின்ற இந்தக் காலம்
எவ்வளவு குரூரமானது
கனவுகள் நெடுகிலும்
வலி மிகைத்திருந்தது
வெம்மை கசிந்த
துன்பியல் அது

கொடுரம் நிரைந்த
வானாந்தர இருட்டிலும் பார்க்க
பயங்கரம்
நரகம் சபித்த மரணம்
ஜீவியத்தின் உசிதமற்ற
தருனமது

புணர்சிக்குப் பின்
வெறுக்கப்பட்ட பெண்னாய்
அப்போது வானமும்
மழையை வெறுத்துத்தானிருந்தது
பெருந்துயரத்தோடே
பயணம் தொடங்கிற்று
அது
கனவுகளை நொருக்கி
கொடுரமும் வன்மையும்
கலந்த மற்றுமொரு
தோல்வியின் செய்தியை
எங்கிலும் சொல்லியிருந்தது
அது

நீளும் நாட்கள்

இருட்டிய பின்பே
மெழுகுவர்த்திகள்
அனைந்து போன
ஓர் இரவில்
சலனமின்றி யாவரும்
தேவதைகள் கனவில்
வரங்கள் யாவும் சாபங்களாய்

ஜீவியத்தில்
கண்ணீரும் தோல்வியும்
சமபட்டுக்கொள்வதில்
நிஜங்களோடு முரண் படுகிறது
வாழ்வு

சரி விகிதமற்ற
பிரபஞ்ச இரகசியம்
வெற்றுப்பொழுதுகளில்
தேடுகிறேன்

இரவுகள் தொலைத்த
தூக்கம்
நம்பிக்கையோடு மடடுமே
நகரும் நாட்கள்

சாளரம் வழியே
கசியும் விடியலை
வரவேற்கப்புறப்படுகிறேன்
மனதில் ஆயிரமாயிரம்
இருள்களோடு

வெறுத்துப்போதல்



வலி மிகைத்து
ஆக்ரோஷமாய்
மெல்லிய படர்தலின்
இடர்பாட்டில்
தோற்றன கனவுகள்

மெய்களை கடந்த
பொய்கள் அதன்
ஆழங்களையும் அகலங்களையும்
ஜடம் மறைத்து
உயிர்த்தது

சயனம்
சபித்த இருள்கள்
சூனியத்தை ஜெயித்தன
சுயம் வன்மைகளை
கௌரவிக்க பழகின

ஜனநாயம்
குரல் நெறித்து
தற்கொலை செய்தன
தலைகள் வெறுத்து
கிரிடம் கால்களிலே

பாவம் நான்
தனியாகத்தான்
நிற்கிறேன்
வாக்கு நிராகரித்தோர்
பட்டியலில்

மௌன மர்மம்

பிரபஞ்ச பெருவெளியில்
நம் தேசம் சபித்த ஓர்
பொழுதில்
அமானுஷ இரவுகளில்
நித்திரை நிராகரித்த
கண்கள்

வழக்கமற்ற பகல்
தூக்கத்தில்
விசித்திர கனவெனக்கு
வேற்றுக்கிரகத்திலிருந்து
பல பறக்கும் தட்டுக்கள்
நம் தேசம் நோக்கி வந்தன

அதில்
முகமூடி சப்பாத்து
குருதி பருகும் ஒரு புது வகையான
ஆயுதமென
சில தடடுக்கள்
நிரப்பப்பட்டிருந்தது

கனவிலும் ஆச்சிரியமெனக்கு
பல தட்டுக்களில்
முற்றுமுழுதாக
கிறிஸ் கொண்டு நிரப்பியிருந்தது

இன்னும் சிலவற்றில்
பாதி மனிதன் கலந்த
புது சிருஷ்டிப்புக்கள்
இருந்தன
பெயர் சொல்ல தெரியவில்லை
எனக்கு

இன்னும் சில பறக்கும்
தட்டுக்களில்
சீருடைகளும்
அடையாளம் காணாத வகையில்
வெள்ளை நிறத்தில் சிலவும்
இருந்தன
அது வெள்ளை வான் ஆகத்தான்
இருக்கனும் போல

கனவின்
கடைசிக்கட்டத்தில்
நான்
கைது செய்யப்பட்டிருந்தேன்
காரணமென அலரிய ஆபோது
நாட்டில் மர்ம மனிதர்கள் என
வதந்தி பரப்பினேனாம்

ஒரு காகம் பல நம்பிக்கை


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக்கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில்தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டு
காக்கை கத்தி ஆடை
களையாமலே கனவு
முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என்
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட
வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னால்
அம்மா
பகல் கடத்தி
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது
நிறத்தால் தனித்துவம் காடடிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக்கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்
இப்போதெல்லாம் அம்மாவின்
நாட்கள் நம்பிக்கையோடு
மட்டுமே நகர்கிறது

பயணம் கடந்த கனவு


நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை

நிலை


வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் அழகையும்
இறக்கைகளின்
ஓவியத்தையும்
அதன்-சுதந்திரத்தையும்
நான்
இரசிக்க மறந்ததில்லை
இறக்கைகள்-பிய்த்து
குருதி கசிந்த அதன்
வலியை நான்
உணராதபோதும்
ஒரு கணத்தின்
இடைவெளியில்
அதன் - காருண்யம்
பற்றி நான்
சிந்திக்கத்தவறியதுமில்லை
சந்தேகமற்ற
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்
நான்
ஆனா போதும்
ஒரு நாளேனும்
தலையிட முடிவதில்லை
என் மகனின்
விளையாட்டில்.

வெறுமைப் பாடல்

மழை பெருத்த
ஓர் அந்தியின் அகாலத்தில்
பெருந்துயரம் துரத்தும்
பயணத்தின் ஒரு கணத்திலே
அது
நிகழ்ந்தாயிற்று

இத்தனை நாட்களை
தின்ற இந்தக் காலம்
எவ்வளவு குரூரமானது
கனவுகள் நெடுகிலும்
வலி மிகைத்திருந்தது
வெம்மை கசிந்த
துன்பியல் அது

கொடுரம் நிரைந்த
வானாந்தர இருட்டிலும் பார்க்க
பயங்கரம்
நரகம் சபித்த மரணம்
ஜீவியத்தின் உசிதமற்ற
தருனமது

புணர்சிக்குப் பின்
வெறுக்கப்பட்ட பெண்னாய்
அப்போது வானமும்
மழையை வெறுத்துத்தானிருந்தது
பெருந்துயரத்தோடே
பயணம் தொடங்கிற்று
அது
கனவுகளை நொருக்கி
கொடுரமும் வன்மையும்
கலந்த மற்றுமொரு
தோல்வியின் செய்தியை
எங்கிலும் சொல்லியிருந்தது
அது

நீளும் நாட்கள்

இருட்டிய பின்பே
மெழுகுவர்த்திகள்
அனைந்து போன
ஓர் இரவில்
சலனமின்றி யாவரும்
தேவதைகள் கனவில்
வரங்கள் யாவும் சாபங்களாய்

ஜீவியத்தில்
கண்ணீரும் தோல்வியும்
சமபட்டுக்கொள்வதில்
நிஜங்களோடு முரண் படுகிறது
வாழ்வு

சரி விகிதமற்ற
பிரபஞ்ச இரகசியம்
வெற்றுப்பொழுதுகளில்
தேடுகிறேன்

இரவுகள் தொலைத்த
தூக்கம்
நம்பிக்கையோடு மடடுமே
நகரும் நாட்கள்

சாளரம் வழியே
கசியும் விடியலை
வரவேற்கப்புறப்படுகிறேன்
மனதில் ஆயிரமாயிரம்
இருள்களோடு

வெறுத்துப்போதல்



வலி மிகைத்து
ஆக்ரோஷமாய்
மெல்லிய படர்தலின்
இடர்பாட்டில்
தோற்றன கனவுகள்

மெய்களை கடந்த
பொய்கள் அதன்
ஆழங்களையும் அகலங்களையும்
ஜடம் மறைத்து
உயிர்த்தது

சயனம்
சபித்த இருள்கள்
சூனியத்தை ஜெயித்தன
சுயம் வன்மைகளை
கௌரவிக்க பழகின

ஜனநாயம்
குரல் நெறித்து
தற்கொலை செய்தன
தலைகள் வெறுத்து
கிரிடம் கால்களிலே

பாவம் நான்
தனியாகத்தான்
நிற்கிறேன்
வாக்கு நிராகரித்தோர்
பட்டியலில்

மௌன மர்மம்

பிரபஞ்ச பெருவெளியில்
நம் தேசம் சபித்த ஓர்
பொழுதில்
அமானுஷ இரவுகளில்
நித்திரை நிராகரித்த
கண்கள்

வழக்கமற்ற பகல்
தூக்கத்தில்
விசித்திர கனவெனக்கு
வேற்றுக்கிரகத்திலிருந்து
பல பறக்கும் தட்டுக்கள்
நம் தேசம் நோக்கி வந்தன

அதில்
முகமூடி சப்பாத்து
குருதி பருகும் ஒரு புது வகையான
ஆயுதமென
சில தடடுக்கள்
நிரப்பப்பட்டிருந்தது

கனவிலும் ஆச்சிரியமெனக்கு
பல தட்டுக்களில்
முற்றுமுழுதாக
கிறிஸ் கொண்டு நிரப்பியிருந்தது

இன்னும் சிலவற்றில்
பாதி மனிதன் கலந்த
புது சிருஷ்டிப்புக்கள்
இருந்தன
பெயர் சொல்ல தெரியவில்லை
எனக்கு

இன்னும் சில பறக்கும்
தட்டுக்களில்
சீருடைகளும்
அடையாளம் காணாத வகையில்
வெள்ளை நிறத்தில் சிலவும்
இருந்தன
அது வெள்ளை வான் ஆகத்தான்
இருக்கனும் போல

கனவின்
கடைசிக்கட்டத்தில்
நான்
கைது செய்யப்பட்டிருந்தேன்
காரணமென அலரிய ஆபோது
நாட்டில் மர்ம மனிதர்கள் என
வதந்தி பரப்பினேனாம்

ஒரு காகம் பல நம்பிக்கை


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக்கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில்தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டு
காக்கை கத்தி ஆடை
களையாமலே கனவு
முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என்
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட
வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னால்
அம்மா
பகல் கடத்தி
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது
நிறத்தால் தனித்துவம் காடடிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக்கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்
இப்போதெல்லாம் அம்மாவின்
நாட்கள் நம்பிக்கையோடு
மட்டுமே நகர்கிறது

பயணம் கடந்த கனவு


நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை

நிலை


வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் அழகையும்
இறக்கைகளின்
ஓவியத்தையும்
அதன்-சுதந்திரத்தையும்
நான்
இரசிக்க மறந்ததில்லை
இறக்கைகள்-பிய்த்து
குருதி கசிந்த அதன்
வலியை நான்
உணராதபோதும்
ஒரு கணத்தின்
இடைவெளியில்
அதன் - காருண்யம்
பற்றி நான்
சிந்திக்கத்தவறியதுமில்லை
சந்தேகமற்ற
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்
நான்
ஆனா போதும்
ஒரு நாளேனும்
தலையிட முடிவதில்லை
என் மகனின்
விளையாட்டில்.