ஒரு காகம் பல நம்பிக்கை


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக்கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில்தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டு
காக்கை கத்தி ஆடை
களையாமலே கனவு
முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என்
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட
வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னால்
அம்மா
பகல் கடத்தி
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது
நிறத்தால் தனித்துவம் காடடிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக்கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்
இப்போதெல்லாம் அம்மாவின்
நாட்கள் நம்பிக்கையோடு
மட்டுமே நகர்கிறது

பயணம் கடந்த கனவு


நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை

நிலை


வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் அழகையும்
இறக்கைகளின்
ஓவியத்தையும்
அதன்-சுதந்திரத்தையும்
நான்
இரசிக்க மறந்ததில்லை
இறக்கைகள்-பிய்த்து
குருதி கசிந்த அதன்
வலியை நான்
உணராதபோதும்
ஒரு கணத்தின்
இடைவெளியில்
அதன் - காருண்யம்
பற்றி நான்
சிந்திக்கத்தவறியதுமில்லை
சந்தேகமற்ற
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்
நான்
ஆனா போதும்
ஒரு நாளேனும்
தலையிட முடிவதில்லை
என் மகனின்
விளையாட்டில்.

எனது கேள்விகள்

கூடு தகர்த்து!
சுதந்திரமிக்க- பறவைகளின்
இருப்பு நீக்கிய
உனது வக்கிரம்
உனதான பொழுதுகளில்
நிகழ்தாயிற்று
அது!
உனது தேசியகீதத்தை
கொச்சைப்படுத்திய அதன்
அழுகையும்
உனது- நிஜங்களோடு
முரண் பட்ட அதன்
கனவுகளுமே!
காரணமென்று-அவைகளின்
கழுத்துக்களை நெரித்ததாய்
அடிக்குறிப்பு எழுதிய
உனது சாமர்தியத்தை
போற்றுகிறேன் எனது
நண்பா நான் உன்னிடம்
கேட்க்க வேண்டியிருக்கிறது
அவைகள் எப்போதாவது
உனது தலையில்
மலங்கழித்தனவா?

மகுடங்களுக்கு ஆறறிவு

நிசப்த்ம் கக்கிய
இரவுப்பொழுதொன்றில்
அவனை சந்திக்க நேரிட்டது
தோல்விகளால் நிரப்பிய இதயத்தோடு
அவனால் பேசிய வார்த்தைகளை
நிஜங்களால் முடியாவிட்டாலும்
கனவுகளால் சிகரம் தொடும்
என்னால் புரிந்து கொள்வது
கஸ்டமாகவே இருந்தது
அவன்
அத்தி பூப்பதை அவர்களின்
வரவோடு ஒப்பிட்டான்
நான்
புதுமையாக ஏதாவது சொல்லென்றேன்
அவன்
அன்று அவர்கள்
எமக்கு மலர்களை
மட்டும் காட்டி விட்டு
எம்மை வேறோடு பிடுங்கிச்சென்ற
பழய கதையை ஞாபகமூட்டினான்
நான்
கடந்தவை திரும்பாதென்று
அறிவுரை சொன்னேன்
அவன்
நாம் அன்று
சிறகுகள் வாங்க கால்
நடையாய் போன
கதையை வெட்கத்தோடு
விபரித்தான்
நான்
அனுபவமெல்லாம் ஒரு பாடமென்று
போதனை செய்தேன்
இறுதியில்
அவன் தன்னுள்ளத்தில்
நெடு நாள் மறைத்து
வைத்திருந்த ஒரு காதலை
சொல்வதப்போல அச் செய்தியை
சொன்னான்
அவனுக்கும் அழைப்பு
வந்திருக்கிறதாம் நாளை
கொழும்பிலிருந்து தலைவரின்
போஸ்டர்
வருகிறதாம்

ஒரு காகம் பல நம்பிக்கை


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக்கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில்தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டு
காக்கை கத்தி ஆடை
களையாமலே கனவு
முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என்
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட
வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னால்
அம்மா
பகல் கடத்தி
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது
நிறத்தால் தனித்துவம் காடடிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக்கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்
இப்போதெல்லாம் அம்மாவின்
நாட்கள் நம்பிக்கையோடு
மட்டுமே நகர்கிறது

பயணம் கடந்த கனவு


நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை

நிலை


வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் அழகையும்
இறக்கைகளின்
ஓவியத்தையும்
அதன்-சுதந்திரத்தையும்
நான்
இரசிக்க மறந்ததில்லை
இறக்கைகள்-பிய்த்து
குருதி கசிந்த அதன்
வலியை நான்
உணராதபோதும்
ஒரு கணத்தின்
இடைவெளியில்
அதன் - காருண்யம்
பற்றி நான்
சிந்திக்கத்தவறியதுமில்லை
சந்தேகமற்ற
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்
நான்
ஆனா போதும்
ஒரு நாளேனும்
தலையிட முடிவதில்லை
என் மகனின்
விளையாட்டில்.

எனது கேள்விகள்

கூடு தகர்த்து!
சுதந்திரமிக்க- பறவைகளின்
இருப்பு நீக்கிய
உனது வக்கிரம்
உனதான பொழுதுகளில்
நிகழ்தாயிற்று
அது!
உனது தேசியகீதத்தை
கொச்சைப்படுத்திய அதன்
அழுகையும்
உனது- நிஜங்களோடு
முரண் பட்ட அதன்
கனவுகளுமே!
காரணமென்று-அவைகளின்
கழுத்துக்களை நெரித்ததாய்
அடிக்குறிப்பு எழுதிய
உனது சாமர்தியத்தை
போற்றுகிறேன் எனது
நண்பா நான் உன்னிடம்
கேட்க்க வேண்டியிருக்கிறது
அவைகள் எப்போதாவது
உனது தலையில்
மலங்கழித்தனவா?

மகுடங்களுக்கு ஆறறிவு

நிசப்த்ம் கக்கிய
இரவுப்பொழுதொன்றில்
அவனை சந்திக்க நேரிட்டது
தோல்விகளால் நிரப்பிய இதயத்தோடு
அவனால் பேசிய வார்த்தைகளை
நிஜங்களால் முடியாவிட்டாலும்
கனவுகளால் சிகரம் தொடும்
என்னால் புரிந்து கொள்வது
கஸ்டமாகவே இருந்தது
அவன்
அத்தி பூப்பதை அவர்களின்
வரவோடு ஒப்பிட்டான்
நான்
புதுமையாக ஏதாவது சொல்லென்றேன்
அவன்
அன்று அவர்கள்
எமக்கு மலர்களை
மட்டும் காட்டி விட்டு
எம்மை வேறோடு பிடுங்கிச்சென்ற
பழய கதையை ஞாபகமூட்டினான்
நான்
கடந்தவை திரும்பாதென்று
அறிவுரை சொன்னேன்
அவன்
நாம் அன்று
சிறகுகள் வாங்க கால்
நடையாய் போன
கதையை வெட்கத்தோடு
விபரித்தான்
நான்
அனுபவமெல்லாம் ஒரு பாடமென்று
போதனை செய்தேன்
இறுதியில்
அவன் தன்னுள்ளத்தில்
நெடு நாள் மறைத்து
வைத்திருந்த ஒரு காதலை
சொல்வதப்போல அச் செய்தியை
சொன்னான்
அவனுக்கும் அழைப்பு
வந்திருக்கிறதாம் நாளை
கொழும்பிலிருந்து தலைவரின்
போஸ்டர்
வருகிறதாம்